Well, Bore, water tank- Vasthu

கிணறு-போர்வெல் அமைக்கும் இடங்கள்

     மனிதன் உயிர் வாழ அடிப்படை காரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்று நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தடையின்றி கிடைத்தால் தான் மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். காலையில் எழந்து காலை கடன் முடிப்பது முதல் இரவு மாத்திரை சாப்பிட்டு படுக்கும் வரை நீரின் முக்கியத்துவம் மனித வாழ்வில் இன்றியமையாததாகிறது. தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தால் நீர் நிலைகள் எல்லாம் இருப்பிடங்களாக மாறிக் கொண்டு இருப்பதால் நிலத்தடி நீரின் அளவானதும் குறைந்து கொண்டே வருகிறது.

நல்ல மழை பெய்தாலும் மழை நீரானது  கழிவு நீராய் வெளியேற்றப்படுகிறதே தவிர நிலத்தடி நீராக மாற நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நம் வீட்டு தரைகளுக்கு சிமெண்ட், அல்லது மொசைக் போட்டு அழகுப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை சற்று அரசின் மழை நீர் சேமிப்பு திட்டத்திலும் காட்டினால் தண்ணீர் பஞ்சம் என்பதே நாட்டில் வராது. கடல் நீரை குடிநீராக்கினால் மக்களின் தண்ணீர் தட்டுபாடு விலகும் என்று அரசு கஷ்டப்பட்டு எடுக்கும் முயற்சிகளிலும் மக்கள் தண்ணீர் சுவையாக இல்லை, குடித்தால் தாகம் தீரவில்லை என்று குறை கண்டு பிடிக்கிறார்களே தவிர மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில்லை.

ஏரிக்குள் வீட்டை கட்டிக் கொண்டு தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட்டது என்று கூறினால் என்ன நியாயம்? வாழும் வீட்டில் தண்ணீரின் தேவையறிந்து எங்கு கிணறு தோன்டினால் நன்றாக தண்ணீர் கிடைக்கும். எங்கு போர்வெல் அமைத்தால் தண்ணீர் தெளிவாக கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக ஆராய்ந்து அந்த இடத்தில் கிணறு போர்வெல் போன்றவற்றை அமைத்தால் வீட்டின் தண்ணீர் தேவையானது பூர்த்தியாவதுடன் கங்கா தேவியும் வற்றாமல் நமக்கு உறுதுணையாக இருப்பாள்.

   ஒரு வீட்டின் நீர் ஆதாரம் என்பதை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தான் அடைய முடியும். எந்த மனையாக இருந்தாலும் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் தான் மற்ற இடங்களை விட நீர் ஆதாரங்கள் சிறப்பாக இருக்கும். அதனால் கிணறு மற்றும் போர்வெல்லை ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். இப்படி வடகிழக்கில் அமைக்கப்படும் இடங்களில் நீர்வற்றாமல் இருக்கும் என்பது ஆதார பூர்வமான உண்மை.

     வடகிழக்கு பகுதியில் கிணறோ, அல்லது போர்வெல்லோ அமைக்கும் போது வடக்குதிசையின் மத்திம பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்தல் நல்லது. இல்லையெனில் கிழக்குதிசையின் மத்திய பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்து கொள்வதும் சிறப்பு.

      இதில் நாம் கணக்கிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையை இணைக்க கூடிய ஒரே நேர்கோட்டில் இருக்ககூடாது. அதுபோல வீட்டை சுற்றி அதிக இடமிருந்தால் மனையின் வடகிழக்கு மூலையையும், கட்டிடத்தின் வடகிழக்கு மூலையையும் இணைக்கும் கோட்டிலும் கிணறு அல்லது போர்வெல் அமைக்க கூடாது.

     தற்போதுள்ள இடபற்றாகுறையினால் கிணறு வைத்திருப்பவர்கள் கூட அதன் மேல் தளத்தை மூடி விட்டு அதனை கடந்து தான் செல்கிறார்கள். கிணற்றை மூடாமல் சூரிய ஒளி படும்படி அமைப்பது தான் நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் கிணற்றின் மேற்பகுதியை மூட நேர்ந்தாலும் அதனை வழி பாதையாக பயன்படுத்தாதிருப்பது நல்லது. குறிப்பாக ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு செல்லும் வழியிலாவது கிணற்றை அமைக்காமல் இருப்பது நல்லது.

      ஆக கிணறு, போர்வெல்லை வடகிழக்கு பகுதி, அதனை ஒட்டிய பகுதியில் அமைப்பது நல்லது. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் அமைக்கக் கூடாது.

சம்ப்- கீழ்நிலை தண்ணீர் தொட்டி

     இன்றளவில் பெரிய, சிறிய, வீடுகள் முதல் தங்களுடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சூழ்நிலை தண்ணீர் தொட்டிகளை அமைக்கிறார்கள். அதாவது சம்ப் இந்த சம்பில் சேமிக்கப்படும் நீரை கொண்டு (கிணறு போர்வெல் போன்றவற்றில் நீர் வற்றினாலும்) அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. சம்ப்பில் சேமிக்கப்படும் நீரானது அரசாங்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்காக வினியோகிக்கும் தண்ணீராகும். இதை கார்ப்பரேஷன் வாட்டர் என்பார்கள். வீதியை ஒட்டி தரைமட்டத்திற்கு கீழே உள்ள பிரதான குழாயிலிருந்து, ஒரு சிறிய குழாயானது பிரிந்து வீடுகளுக்கு புகுந்து  கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் உள்ளே நீரை செலுத்தும். நிலத்தடி நீருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றாலும் கிணறு அமைக்க வாஸ்துப்படி எந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறோமோ அதே விதிமுறையை தான் கீழ்நிலை தொட்டியை (சம்ப்) அமைப்பதிலும் பயன்படுத்த வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடங்களிலும் சம்பினை அமைக்கலாம்.

      மாநகராட்சி குடிநீர் குழாய்களின் இணைப்பானது தெருவை ஒட்டி இருப்பதால் தெருப்புறத்தை ஒட்டியே சம்ப்பை அமைக்க வேண்டி உள்ளது. அப்படி அமைக்க வேண்டிய பட்சத்தில் முடிந்தவரை வடகிழக்கு மூலையில் அமைப்பது தான் சிறப்பு. வீட்டின் வாசலானது தெற்கு பார்த்தபடி இருந்தால் சம்ப்பை கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும், மேற்கு பார்த்த படியிருந்தால் வடக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும் அமைப்பது நல்லது. எந்தவொரு காரணத்திற்காகவும் சம்ப், கிணறு, போர்வெல் போன்றவற்றை தென்மேற்கு மூலையில் அமைக்கவே கூடாது. அப்படி அமைத்தால் பல்வேறு வகையில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள், ஆரோக்கிய பாதிப்புகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

மேல் நிலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்க்)

     கிணற்று நீர், போர்வெல் நீர், மற்றும் சம்ப் நீர் போன்றவற்றை பைப்புகள் மூலம் மேலேற்றி மேல்நிலை தொட்டிகளுக்கு (அதாவது கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) அனுப்பி அதிலிருந்து பல குழாய்களை இணைந்து ஒரு மனையில் எத்தனை வீடுகள் உள்ளதே அத்தனை வீடுகளுக்கும் விநியோகம் செய்கிறார்கள். இப்படி அமைக்கப்படும் மேல்நிலை தொட்டிகளில் நீர் சேமிக்கப்படுவதால் வீட்டின் மேற்புறத்தில் எடை கூடுதலாகிறது. பொதுவாக கட்டிடங்கள் கட்டும் போது தென் மேற்கு மூலையானது உயர்ந்தும். மற்ற மூலைகள் தாழ்ந்தும் இருந்தால் தான் நற்பலன் உண்டாகும் என்பது வாஸ்துவின் விதி. மேல்நிலை தொட்டியானது தென்மேற்கு மூலையில் அமைக்கலாம் என பலர் கூறி வந்தாலும் ஆராய்ச்சி பூர்வாக வாஸ்துப்படி பார்க்கின்ற போது மேல் நிலை தொட்டியினை (கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் அமைத்து விட்டு, இந்த தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது போல ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையயோ தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறப்பு, ஏனென்றால் வீட்டின் கட்டிடமானது தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது தான் வாஸ்துப்படி நல்லது. ஆக ஷ்ணீtமீக்ஷீ tணீஸீளீ-ஐ வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கிலோ, வடமேற்கிலோ அமைப்பது உத்தமம். கண்டிப்பாக ஒரு கட்டிடத்தில் அதிக எடையானது வடகிழக்கில் இருக்க கூடாது. இது மட்டுமின்றி வடகிழக்கு பகுதி உயரமாகவும் இருக்க கூடாது.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *